செவ்வாய், 8 ஜூலை, 2014

2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல்; ஒரு பார்வை !!!!!!!!!!!


 2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா இன்று தாக்கல் செய்தார்.
புதிய ரயில்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
ரயில்வே பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* புதிய துறைமுகங்களுக்கு ரயில் சேவை வழங்கப்படும்.

* ரயிலின் வருகை, புறப்பாடு குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்க ஏற்பாடு. 

* மைசூர்- பெங்களூர்- சென்னைக்கு அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்படும். 

* சில ரயில்களின் வேகம் 160 கி.மீட்டர் முதல் 200 கி.மீட்டர் வரை அதிகரிக்கப்படும்.

* முதல் தர அந்தஸ்து உள்ள ரயில் நிலையங்களில் வைஃபை வசதி.

* பார்சல்களை பாதுகாக்க தனியார் உதவியுடன் ரயில் நிலையங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் வழங்கும் வசதி அமைக்கப்படும்.

* முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளுக்கு இணையத்தில் டிக்கெட் வாங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களை இணைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

* முக்கிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுத்தப்படுத்துதலில் தேர்ந்த நிறுவனங்களின் உதவியை ரயில்வே பெறும்.

* கட்டமைப்புகளை மேம்படுத்த உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து முதலீடு கோரப்படும்.

* 2014-15ஆம் ஆண்டில் ரயில்வேயின் செலவினம் ரூ.1,49,176 கோடியாக இருக்கும்.

* யாத்ரீர்களின் வசதிக்காக ராமேஸ்வரம், 

* நடைமேடை டிக்கெட்டை இணையத்தில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மும்பை- அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்படும்.

* மகளிருக்கான ரயில் பெட்டிகளில் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.

* ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவர்.

* தபால் நிலையம், செல்போன் மூலம் டிக்கெட் முன்பதிவு விரிவுபடுத்தப்படும்.

* 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நான்கு திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை.

* ரயில்களில் பயோ டாய்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ரயில்வேயில் அந்திய நேரடி முதலீடுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

* முக்கிய ரயில் நிலையங்களில் தனியார் உதவியுடன் லிஃப்ட் அமைக்கப்படும்.

* ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

* 50 ரயில் நிலையங்களை ஏஜென்சிகள் மூலம் பராமரிக்க நடவடிக்கை.
* புகழ் பெற்ற நிறுவனங்களின் உணவுப்பொருட்களை ரயில்களில் அறிமுகம் செய்ய திட்டம்.

* ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

* அனைத்து ரயில்களும், ரயில் நிலையங்களும் சுத்தமாக பராமரிக்கப்படும்.

* உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்கிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணங்களை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும்

* சிறிய அளவிலான புதிய திட்டங்கள் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் 3,700 கி.மீட்டருக்கு புதிய பாதை அமைக்க ரூ.41,000 கோடி செலவிடப்படும்.


தனியார் பங்களிப்பு தேவை

* ரயில்வேத்துறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பு தேவை

* 2013-14ல் ரயில்வேயின் செயல்பாட்டு லாபம் குறைந்தது.

* எந்த நடைமேடைக்கும் செல்ல பேட்டரி வாகனங்களை இயக்க திட்டம்.


குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்

* அனைத்து ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த திட்டம்.

* வைர நாற்கரத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9 லட்சம் கோடி தேவை

* புல்லட் ரயில்களை இயக்க ரூ.60,000 கோடி தேவைப்படுகிறது.

* ரயில்வேயை நவீனமயமாக்க அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தேவை.

* பயணிகளுக்கான ரயில் சேவை தருவதில் இழப்பு 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* வர்த்தக நிறுவனம் போல் ரயில்வே, வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு.

* ரயில் கட்டண உயர்வு கடினமானது. ஆனால், தவிர்க்க முடியாதது.

* பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் வேறு ஆதாரங்கள் மூலம் ரயில்வேக்கு நிதிதிரட்ட முடிவு

* உள்நாட்டு, அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் நிதி திரட்டப்படும்.

* ரயில் கட்டண உயர்வால் 8 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* ஒரு பயணியை ஒரு கிலோ மீட்டர் அழைத்துச் செல்ல 10 காசுகளாக இருந்த செலவு தற்போது 23    பைசாவாக உயர்ந்துள்ளது.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்கள் மூலம் 31 சதவீதம் சரக்குகள் மட்டுமே கொண்டு செல்லப்படுகின்றன.


வரவு 1 ரூபாய்...செலவு 94 காசுகள்
* ஒவ்வொரு ரூபாய் வரவிலும் 94 காசுகள் செலவாகி விடுகிறது.

* ரயில் கட்டணங்களை நிர்ணபிப்பதில் சீரான நடைமுறைகள் இல்லை.

* கடந்த காலங்களில், முதலீடுகள் தவறான வழிகளில் செலவழிக்கப்பட்டுள்ளன.

* உலகின் மிகப்பெரிய சரக்கு எடுத்துச் செல்லும் துறையாக ரயில்வேத்துறை எடுத்து செல்ல திட்டம்.

* ரயில் இணைப்பு இல்லாமல் உள்ள இடங்களில் சேவை தொடங்குவது சவாலானது.


100 கோடி டன் சரக்குகள் 
*  இந்தியன் ரயில்வே இந்தியாவின் அடையாளமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

* 100 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாளுகிறது.

* பாதுகாப்புப்படையினரின் முதுகெலும்பாக ரயில்வேத்துறை செயல்படுகிறது.

* நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் தேவை.

* சரக்கு போக்குவரத்து தற்போது 31 சதவீதம் மட்டுமே உள்ளது.

* ரயில்வே துறை சவால் நிறைந்தது

* பதவியேற்ற ஒரு மாதத்தில் புதிய சேவைகளை தொடங்க பல கோரிக்கைகள் வந்துள்ளன.

* ரயிலில் இதுவரை பயணிக்காத மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். 


30 லட்சம் ஊழியர்கள்
* 2.3 கோடி பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

* 30 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்திய ரயில்வேத்துறை.

* திட்டங்களை அறிவிப்பதை விட செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதுள்ளது

*  ரயில்வே துறையில் தேவைக்கும், கிடைக்கும் வருவாய்க்கும் மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. முந்தைய கட்டண கொள்கை சமச்சீராக இல்லை;


உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை

* கட்டண உயர்வு மட்டுமே ரயில்வே துறையை மேம்படுத்தாது; மற்ற வாய்ப்புகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

* உணவு வசதி, ஆன்லைன் புக்கிங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்