மத்திய அரசு இயற்றவிருக்கும் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்படி பயன் பெறுவோர் யார்? யார்??
1, உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
2, வருடாந்திர மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள்.
3, 5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்டவர்கள்.
4, 1000 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் வீடு உடையவர்கள்.
5, நகராட்சி மற்றும் நகராட்சிக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மனை அளவும் கணக்கில் கொள்ளப்படும்.
கிருத்துவர், முஸ்லீம், இந்து என அனைவருமே!
மத்திய அரசின் (ஏழ்மை நிலையில் இருக்கும் உயர்சாதிமக்களுக்கு) 10% உயர்சாதி ஒதுக்கீடு பெறும் சாதிகளின் பட்டியல்!
#முற்பட்ட வகுப்பினர்
1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
1.ஆங்கிலோ இந்தியர் (511)
2.ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
3.லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
4.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
5.ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
6.முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
7.தாவூத் (608)
8.கட்ஸு (சைத்)(609)
9.மீர் (610)
10.மைமன் (சைத்) (611)
11.நவாப் (612)
12.அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
13.501 செட்டியார் (701)
14.அச்சு வெள்ளாளர் (702)
15.ஆதி சைவர் (703)
16.ஆற்காடு முதலியார் (704)
17.ஆரியர் (705)
18.அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
19.ஆற்காட்டு வெள்ளாளர் (707)
20.அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
21.ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
22.பலிஜாநாயுடு (#பலிஜாசெட்டியார்) (710)
23.பேரி செட்டியார் (711)
24.போகநாட்டுரெட்டியார் (712)
25.பிராமணர் (713)
26.சோழபுரம் செட்டியார் (714)
27.தேவதிகர் (715)
28.எழுத்தச்சர் (716)
29.ஞானியர் (717)
30.ஜைனர் (718)
31.கடையத்தார் (719)
32.கதுப்பத்தான் (720)
33.காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)NR
34.கம்மவார்நாயுடு (#கம்மவார்நாயக்கர்___நாயுடு)(722)
35.கார்காத்தார் (கார்காத்த வெள்ளாளர்,காரைக்காட்டு வெள்ளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
36.காசுக்கார ஆச்சாரி (724)
37.காயல் செட்டி (725)
38.கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
39.கொண்டியர் (727)
40.கொங்குச் செட்டியார் (728)
41.கொங்குநாயக்கர் (729)
42.கொங்கு ரெட்டியார் (730)
43.கொந்தல வெள்ளாளர் (731)
44.கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
45.கோட்டைப்புரச் செட்டியார் (733)
46.கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
47.குக வாணியர் (735)
48.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
49.மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
50.மொட்டை வெள்ளாளர் (738)
51.மூசிகபலிஜகுலம் (739)
52.நாடன் (நாட்டார்) (740)
53.நாயர் (மேனன், நம்பியார்) (741)
54.நாங்குடி வெள்ளாளர் (742)
55.நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
56.ஒருகுண்ட ரெட்டி (744)
57.இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, 58.குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
பணிக்கர் (746)
59.பத்தான் (பட்டானி), கான் (747)
60.ராஜபீரி (748)
61.ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் #ரெட்டி__காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
62.ராவுத்தநாயுடு (750)
63.சைவச் செட்டியார் (751)
64.சைவ ஓதுவார் (752)
65.சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
66.சைவ சிவாச்சாரியார் (754)
67.சைவ வெள்ளாளர் (755)
68.சானியர் (756)
*69.க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)*
70.திருவெள்ளறைச் செட்டியார் (758)
71.திய்யர் (759)
72.தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
73.உலகமாபுரம் செட்டியார் (761)
74.வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
75.வெள்ளாளப் பிள்ளைமார் (763)
76.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
77.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
78.வாரியர் (மலையாளம்) (766)
79.சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)
இந்த வகையான இடஒதுக்கீட்டை அரசு சட்டமாக இயற்றினால், அவர்கள் சார்ந்த வட்டாட்சியர்(தாசில்தார்) அலுவலகத்தில் சாதி சான்றிதழ், மற்றும் வருமான சான்றிதழ் பெறும்போது மேலுள்ள சாதிக் குறியீட்டு எண்னை குறிப்பிட்டு வேண்டிய ஆவணங்களைப் பெறலாம். மக்களுக்கு இதைத் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக