நம்முடைய தொழிற்சங்க ஆசான் டாக்டர் R .அப்சல், பொது செயலாளர் AIOBC REA/SZ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம், எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ.. அனைத்து ஓபிசி குடும்பங்கள் சார்பாக வாழ்த்துகிறேம்.. வாழ்க வாழ்க பல்லாண்டு, இவ்வையகம் புகழ வாழியவே... என்றும் உங்கள் பணியில்.. AIOBC நிர்வாகிகள்.
menus
- Home
- Department Letters
- PNR STATUS
- href='http://www.centralgovernmentnews.com/'>OBC LIST IN INDIA
- AIOBC Association Matters
- Services
வெள்ளி, 13 டிசம்பர், 2019
BIRTHDAY CELEBRATION
நம்முடைய தொழிற்சங்க ஆசான் டாக்டர் R .அப்சல், பொது செயலாளர் AIOBC REA/SZ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம், எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ.. அனைத்து ஓபிசி குடும்பங்கள் சார்பாக வாழ்த்துகிறேம்.. வாழ்க வாழ்க பல்லாண்டு, இவ்வையகம் புகழ வாழியவே... என்றும் உங்கள் பணியில்.. AIOBC நிர்வாகிகள்.
வெள்ளி, 6 டிசம்பர், 2019
சட்டமேதை அம்பேத்கர் 63வது நினைவு தினம்
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.
1948-ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும். 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955-ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.
இந்நிலையில், இன்று அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை 10:30 மணியளவில் நமது தென்னக இரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்திலும், 11:00 மணியலவில் DRM அலுவலகத்திலும் அவரது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் AIOBC மத்தியசங்க தலைவர், மத்தியசங்க துனைத்தலைவர், மத்தியசங்க பொருளாளர் மற்றும் மத்தியசங்க நிர்வாகிகள், கோட்ட-கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்..
புதன், 13 நவம்பர், 2019
PREM அலுவலக திறப்பு விழா
நமது சென்னை கோட்டத்தின் PREM அலுவலக திறப்பு விழா 12/11/19அன்று நடைபெற்றது தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய நமது AIOBC சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.R.அப்சல் அவர்களுக்கும், பொதுச்செயலாளர் அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைத்து தலைமை அதிகாரிகளுக்கும் மற்றும் சங்கத்தின் சொந்தங்களுக்கும், விழா சிறப்பாக நடைபெற உதவிய AIOBC சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும். மத்தியசங்கம் சார்பாகவும் சென்னை கோட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி..... இவன், AIOBC/SZ.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)